Map Graph

மதுரை மையச் சிறை

மதுரை மையச் சிறை தமிழ்நாட்டிலுள்ள மதுரையில் அமைக்கப்பட்டுள்ள சிறைச்சாலையாகும். இது 1865-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இங்கு 1252 கைதிகளை வைக்கும் வசதி உள்ளது. இச் சிறைச்சாலை 31 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இச்சிறையில் பெண் சிறைக் கைதிகளின் வளாகம் உள்ளது. இச்சிறை வளாகத்துள் இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் (IGNOU) மையம் உள்ளது. இப்பல்கலைககழகம் நடத்தும் படிப்புகளில் கைதிகள் இலவசமாகச் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். அவர்களுக்கான பல்கலைக்கழக இறுதித் தேர்வுகளும் இவ்வளாகத்துள்ளாகவே நடத்தப்படுகின்றன.

Read article